/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பெண்ணாடத்தில் மின்சாரம் 'கட்' பொதுமக்கள் சாலை மறியல்
/
பெண்ணாடத்தில் மின்சாரம் 'கட்' பொதுமக்கள் சாலை மறியல்
பெண்ணாடத்தில் மின்சாரம் 'கட்' பொதுமக்கள் சாலை மறியல்
பெண்ணாடத்தில் மின்சாரம் 'கட்' பொதுமக்கள் சாலை மறியல்
ADDED : மே 05, 2024 04:32 AM

பெண்ணாடம், : மின்சாரம் வழங்கக்கோரி, பெண்ணாடத்தில் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
பெண்ணாடம் பேரூராட்சி, 7வது வார்டில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இப்பகுதியில், எல்லையம்மன் கோவில் அருகே உள்ள டிரான்ஸ்பார்மர் மூலம் இப்பகுதிக்கு மின்வினியோகம் செய்யப்படுகிறது.
டிரான்ஸ்பார்மர் பழுது காரணமாக 3 நாட்களாக இப்பகுதியில் மின்சாரம் இல்லை. மின்வாரிய அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை. இதனால் அப்பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
இதனால், ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் 50க்கும் மேற்பட்டோர் நேற்று காலை 11:40 மணியளவில் விருத்தாசலம் - திட்டக்குடி சாலையில் பெண்ணாடம் கிழக்கு வாள்பட்டறை பஸ் நிறுத்தம் அருகே மறியலில் ஈடுபட்டனர்.
தகவலறிந்து வந்த பெண்ணாடம் சிறப்பு சப் இன்ஸ்பெக்டர்கள் சின்னதுரை, ராஜாங்கம் தலைமையிலான போலீசார் மற்றும் உதவி பொறியாளர் வெங்கடேசன் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அதில், இன்று (நேற்று) மாலைக்குள் மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். அதையேற்று பகல் 12:00 மணியளவில் அனைவரும் கலைந்து சென்றனர். இதனால் விருத்தாசலம் - திட்டக்குடி சாலையில் 20 நிமிடம் போக்குவரத்து பாதித்தது.