/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
மின்னொளி கால்பந்து போட்டி பரிசளிப்பு
/
மின்னொளி கால்பந்து போட்டி பரிசளிப்பு
ADDED : ஜூலை 02, 2024 05:39 AM

கடலுார்: கடலுார் அண்ணா விளையாட்டரங்கில் மாநில அளவிலான கால்பந்து போட்டி பரிசளிப்பு விழா நடந்தது.
மாநில அளவில் சிறுவர்களுக்கான மின்னொளி கால்பந்து போட்டி நடந்தது. 11,13,15 வயதுக்குட்பட்ட பிரிவில் நடந்த இப்போட்டியில் கடலுார், சென்னை, மதுரை, புதுச்சேரி உட்பட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 52 அணிகள் பங்கேற்றன.
பரிசளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினர்கள் கலெக்டர் அருண் தம்புராஜ், ஏ.டி.எஸ்.பி., அசோக்குமார் ஆகியோர் போட்டிகளில் வென்ற அணிகளுக்கு பரிசு வழங்கினர். வி ஸ்கொயர் மால் உரிமையாளர் அனிதா ரமேஷ், எம்.ஜி.ஆர்., இளைஞரணி துணை செயலாளர் கார்த்திகேயன் வாழ்த்தி் பேசினர்.
ஏற்பாடுகளை நைசா கால்பந்து கழக தலைமை பயிற்சியாளர் செந்தில்குமார், துணை பயிற்சியாளர் பாலாஜி, ஒருங்கிணைப்பாளர்கள் பாலமுருகன், மணிகண்டன், சுதர்சன், கார்த்திக் செய்திருந்தனர்.