தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ தொடக்க கல்வி ஆசிரியர்கள் போராட்டம்

தொடக்க கல்வி ஆசிரியர்கள் போராட்டம்

தொடக்க கல்வி ஆசிரியர்கள் போராட்டம்


ADDED : செப் 11, 2024 01:45 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 11, 2024 01:45 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கடலுார்: கடலுார் சி.இ.ஓ., அலுவலகம் முன், தமிழ்நாடு தொடக்கக்கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழு சார்பில் 31 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஒருநாள் அடையாள வேலை நிறுத்த போராட்டம் நடந்தது.

தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில பொது செயலாளர் ஜெகன்நாதன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் அந்தோணி ஜோசப், ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி சாந்தகுமார் மற்றும் நிர்வாகிகள் குமரகுருநாதன், பாலமுரளிகிருஷ்ணன் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். இதில், பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். முடக்கப்பட்ட ஒப்படைப்பு விடுப்பு ஊதியத்தை மீண்டும் வழங்க வேண்டும். உயர்கல்வி பயின்று பின்னேற்பு கோரிய ஆசிரியர்களுக்கு ஆணை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட 31 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

அப்போது, நிர்வாகிகள் வேதரத்தினம், ராஜேந்திரன், செல்வக்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர். நிர்வாகி ராயப்பன் நன்றி கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us