ADDED : மார் 28, 2024 04:22 AM
அ நிறம் | அளவு
புதுச்சத்திரம் : புதுச்சத்திரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் பெரியப்பட்டு ஆலோடிசாப் தர்காவில்வெளியூர்களிலிருந்து வந்து தங்கி சிகிச்சை பெற்றுவரும், பொதுமக்களுக்கு யானைக்கால் மற்றும் மேலேரியா நோய் உள்ளதா என ரத்தமாதிரி எடுத்து பரிசோதனை செய்யப்பட்டது.
வட்டார சுகாதார மேற்பார்வையாளர் சிவப்பிரகாசம் தலைமையில் சுகாதார ஆய்வாளர்கள்பிரகாஷ், சரவணன், பிரேம்குமார், சரண்ராஜ், அன்பரசு குழுவினர், 54 பேருக்கு பரிசோதனை செய்தனர்.
