/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கிடப்பில் அணைக்கட்டு தார் சாலை பணி
/
கிடப்பில் அணைக்கட்டு தார் சாலை பணி
ADDED : மே 31, 2024 02:48 AM

பெண்ணாடம்,: அணைக்கட்டு தார்சாலை பணி கிடப்பில் போடப்பட்டுள்ளதால் கிராம மக்கள், விவசாயிகள் கடும் அவதி அடைகின்றனர்.
பெண்ணாடம் அடுத்த பெலாந்துறை - அணைக்கட்டு தார் சாலையை பயன்படுத்தி பெலாந்துறை, பாசிக்குளம், பெரியகொசப்பள்ளம், சின்னகொசப்பள்ளம், மாளிகைக்கோட்டம் உட்பட 10க்கும் மேற்பட்ட கிராம மக்கள் தங்களின் அத்தியாவசிய தேவைகளுக்கு பெண்ணாடம் மற்றும் அரியலுார் மாவட்ட கிராம பகுதிகளுக்கு எளிதில் சென்று வருகின்றனர்.
இச்சாலை பல ஆண்டுகளாக சீரமைக்காததால் பெலாந்துறையில் இருந்து அணைக்கட்டு வரை செல்லும் சாலையில் 1 கிலோ மீட்டர் துாரத்திற்கு ஜல்லிகள் பெயர்ந்து, குண்டும் குழியுமாக போக்குவரத்திற்கு லாயக்கற்ற நிலைக்கு மாறியது. இதனால் இவ்வழியே செல்லும் வாகனங்கள் அடிக்கடி பழுதாவதுடன், இரவில் செல்லும் வாகன ஓட்டிகள் தவறி விழுந்து காயமடைந்தனர்.
அதைத்தொடர்ந்து, கடந்த மாதம் தார்சாலை அமைக்க ஜல்லிகள் கொட்டப்பட்டு, பணிகள்துவங்கியது.
ஆனால் இதுவரை எவ்வித பணிகளும் துவங்கவில்லை. இதனால் இவ்வழியே செல்லும் கிராம மக்கள், விவசாயிகள் கடும் அவதியடைகின்றனர்.
எனவே, கிடப்பில் போடப்பட்ட பெலாந்துறை - அணைக்கட்டு தார்சாலை பணியை விரைந்து சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.