/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பண்ருட்டி தற்காலிக மார்க்கெட் வியாபாரிகள் வலியுறுத்தல்
/
பண்ருட்டி தற்காலிக மார்க்கெட் வியாபாரிகள் வலியுறுத்தல்
பண்ருட்டி தற்காலிக மார்க்கெட் வியாபாரிகள் வலியுறுத்தல்
பண்ருட்டி தற்காலிக மார்க்கெட் வியாபாரிகள் வலியுறுத்தல்
ADDED : ஆக 08, 2024 11:38 PM

பண்ருட்டி: பண்ருட்டி காய்கறி மார்க்கெட்டை, மேம்பாலம் கீழ் அமைத்து தரகோரி, வியாபாரிகள் சங்க நிர்வாகிகள் நகராட்சி சேர்மன் ராஜேந்திரனை சந்தித்து வலியுறுத்தினர்.
பண்ருட்டி காய்கறி மார்க்கெட், 30 ஆண்டுக்கு முன் கட்டப்பட்டதால் பல இடங்களில் சேதமாகியுள்ளது. இதனால் புதிய மார்க்கெட் கட்ட முடிவு செய்யப்பட்டு, ஒப்பந்த பணிகள் துவங்கியுள்ளன.
இதனையடுத்து மார்க்கெட்டில் உள்ள கடைகள் அகற்றுவதற்காக நகராட்சி சார்பில் பூர்வாங்க பணிகள் துவங்கியுள்ளன.
இந்நிலையில், காய்கறி வியாபாரிகள் சங்க தலைவர் சிவா தலைமையில் நகராட்சி சேர்மன் ராஜேந்திரனை சந்தித்து, காய்கறி மார்க்கெட் கடைகளுக்கு வாடகை நகராட்சி பெற்றுக்கொள்ளாமல் உள்ளனர். இதனை ஆகஸ்ட் மாதம் பெற்று ரசீது வழங்க வேண்டும். தற்காலிக மார்க்கெட் மேம்பாலத்தின் கீழ், ரயில்வே பகுதியில் அமைத்து மின்வசதி , சுகாதார வசதிகள் செய்து தர வேண்டும் என, கோரிக்கை வைத்தனர். இதுகுறித்து மனு கொடுத்தனர்.
சங்க செயலாளர் மோகன், துணைத் தலைவர்கள் ஆறுமுகம், சீனுவாசன், பொருளாளர் விஜயகுமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.