ADDED : ஆக 23, 2024 12:28 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிதம்பரம் : சிதம்பரம் ஸ்ரீ ராகவேந்திரா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வேலைவாய்ப்பு திறன் வளர்ப்பு பயிற்சி நடந்தது.
சிதம்பரம் கீழமூங்கிலடி ஸ்ரீ ராகவேந்திரா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடந்த வேலை வாய்ப்பு முகாமில், மும்பை டாட்டா கன்சல்டன்சி நிறுவன முதுநிலை மனித வள மேலாளர் நயீம் கான் நவீன் பங்கேற்று, தொழில் நுட்ப உலகில், சிறப்பான வேலை வாய்ப்பை பெறுவதற்கான உத்திகள் குறித்தும், பல்வேறு திறன்களுக்கான வேலை வாய்ப்புகள் குறித்து பேசினார்.
நிகழ்ச்சியில் அனைத்து துறை இறுதியாண்டு மாணவர்கள் பங்கேற்றனர். கல்லூரி வேலைவாய்ப்பு ஒருங்கிணைப்பாளர் உதவி பேராசிரியர் அபிலேஷ் குமார் ஒருங்கிணைத்தார். கல்லூரி முதல்வர் மாலதி, கல்வி அதிகாரி அசோக் குமார் மற்றும் பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.

