ADDED : ஜூன் 20, 2024 04:20 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார் : கடலுார் செம்மண்டலம் வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில், தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நாளை (21ம் தேதி) நடக்கிறது.
இது குறித்து கலெக்டர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
கடலுார் மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ள முகாமில் 15க்கும் மேற்பட்ட தனியார் துறை நிறுவனங்கள் பங்கேற்று தங்கள் நிறுவனத்திற்கு தேவையான நபர்களை தேர்வு செய்கின்றன. தேர்வு செய்யப்படுவோருக்கு உடனடி பணி நியமன ஆணை வழங்கப்படுகிறது. நாளை நடக்கும் வேலை வாய்ப்பு முகாமில் பத்தாம் வகுப்பு, பிளஸ் 2,- ஐ.டி.ஐ.,- டிப்ளமோ - பட்டப்படிப்பு படித்தவர்கள் பங்கேற்று பயன்பெறலாம்.
முகாமில் தேர்வு செய்யப்படுபவர்களின் பதிவு எண் வேலைவாய்ப்பு அலுவலக பதிவிலிருந்து நீக்கம் செய்யப்பட மாட்டாது.