/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கிருஷ்ணசாமி கல்லுாரியில் வேலைவாய்ப்பு முகாம்
/
கிருஷ்ணசாமி கல்லுாரியில் வேலைவாய்ப்பு முகாம்
ADDED : மே 30, 2024 05:43 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார்: கடலுார் கிருஷ்ணசாமி பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லுாரியில் வேலைவாய்ப்பு முகாம் நடந்தது.
சென்னை எஸ்.பி.கே.பவர் இன்பிரா பிரைவேட் நிறுவன மனிதவள மேம்பாட்டுத் துறை மேலாளர் கோபிகிருஷ்ணன் தலைமையிலான குழுவினர் தேர்வு செய்தனர். முகாமில், மின் மற்றும் மின்னணுவியல் பிரிவு இறுதியாண்டு மாணவர்கள் பங்கேற்றனர்.
கிருஷ்ணசாமி கல்வி அறக்கட்டளை தாளாளர் ராஜேந்திரன் தலைமை தாங்கி, முகாமில் தேர்வான மாணவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கினார்.
செயலாளர் விஜயகுமார், கல்லுாரி முதல்வர் இளங்கோ, துணை முதல்வர் ரகு, நிர்வாக அலுவலர் பாலகிருஷ்ணன் வாழ்த்தி பேசினர்.