ADDED : ஆக 13, 2024 05:51 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிதம்பரம்: தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை பொறியாளர்கள் சங்க மாநில செயற்குழு கூட்டம் நடந்தது.
சிதம்பரத்தில், நடந்த கூட்டத்திற்கு, மாநிலத் தலைவர் கார்த்திகேயன் தலைமை தாங்கினார்.மாநில செயலாளர் பிரகலாதன், மாநில பொருளாளர் சுரேஷ் முன்னிலை வகித்தனர்.
கடலூர் மாவட்ட செயற்பொறியாளர் தணிகாசலம், திருச்சி மாவட்ட செயற்பொறியாளர் இளங்கோ பங்கேற்று பேசினர்.
கூட்டத்தில், செயற்பொறியாளர்கள், சாலை ஆய்வாளர்கள் வரை உள்ள காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அரசுக்கு முன்வைக்கப்பட்டது. மாவட்ட தலைவர் ருஷ்ணகுமார், செயலாளர் சந்தானகிருஷ்ணன் நன்றி கூறினர்.

