ADDED : ஜூலை 23, 2024 02:22 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிதம்பரம் : சிதம்பரம் ராகவேந்திரா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தொழில் முனைவோர் மற்றும் திறன் மேம்பாடு கருத்தரங்கு நடந்தது.
கல்லூரி முதல்வர் மாலதி தலைமை தாங்கினார். கல்லூரி கல்வி அதிகாரி அசோக் குமார், அறிமுகவுரையாற்றினார். சிம்லாவில் உள்ள இந்திய மேம்பட்ட ஆய்வு நிறுவன பேராசிரியர் அருணாச்சலம் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று, தொழில் முனைவோருக்கு தேவையான தகுதிகள் மற்றும் திறன்களை வளர்த்து கொள்வதற்கான வழிமுறைகள் குறித்து பேசினார்.
பயிற்சி மற்றும் வேலைவாய்ப்பு அதிகாரி பாலமுருகன், இன்றைய வணிகத்தில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் தாக்கம் குறித்து பேசினார். வணிகவியல் துணை பேராசிரியை பாரதி நன்றி கூறினார். வணிகவியல், வணிகவியல் கணினி பயன்பாடு , வணிக நிர்வாகம் துறைகளை சார்ந்த பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பங்கேற்றனர்.