தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ சுற்றுச்சூழல் தின திடக்கழிவு மேலாண்மை சிறப்பு முகாம்   

சுற்றுச்சூழல் தின திடக்கழிவு மேலாண்மை சிறப்பு முகாம்   

சுற்றுச்சூழல் தின திடக்கழிவு மேலாண்மை சிறப்பு முகாம்   


ADDED : ஜூன் 09, 2026 07:01 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 09, 2026 07:01 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புவனகிரி: புவனகிரி பேரூராட்சி சார்பில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு, திடக்கழிவு மேலாண்மை குறித்து சிறப்பு விளக்க முகாம் நடந்தது.

உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு அட்டவணைப்படி திடக்கழிவு மேலாண்மை விதிகள் -2026 குறித்து, புவனகிரி அரசு ஆண்கள் மேல் நிலைப்பள்ளி வேளாண் பாடப்பிரிவு மாணவர்கள் மற்றும் பொதுமக்களை, பேரூராட்சியின் வளம் மீட்பு பூங்காவிற்கு நேரில் அழைத்து வந்து,  குப்பைகளை நான்கு வகைகளாக தரம் பிரித்து சேகரித்தலின் முக்கியத்துவம் குறித்தும், திடக்கழிவு விதிகளின் முக்கிய சாராம்சங்கள் குறித்தும், செயல்படுத்துவதன் அவசியம் குறித்து விளக்கப்பட்டது.

பேரூராட்சி தலைமை எழுத்தர் மங்களநாதசேதுபதி வரவேற்றார். பேரூராட்சி கண்காணிப்பாளர் கண்ணன், அரசு ஆண்கள் மேல் நிலைப்பள்ளி வேளாண் ஆசிரியர் ராமதாஸ் முன்னிலை வகித்தனர். செயல் அலுவலர் அண்ணாதுரை தலைமை தாங்கி, மாணவர்கள் மற்றும் பொதுமக்களிடம் சுகாதாரம், சிறப்பு, ஈரம் மற்றும் உலர் என நான்கு வகைக் கழிவுகளை தரம் பிரித்து மறு சுழற்சி மேற்கொள்ளும் முறை குறித்து விளக்கம் அளித்தார்.மாணவர்கள் மற்றும் பொதுமக்களின் சந்தேகங்களுக்கு பல்வேறு விளக்கமளித்தனர். முகாமில் பேரூராட்சி பணியாளர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். ஹரி நன்றி கூறினார்.

 

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us