ADDED : ஜூலை 09, 2026 05:11 PM
அ நிறம் | அளவு
கடலுார்: கடலுார் கோண்டூரில் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் கடையை அகற்ற வேண்டுமென, பொதுமக்கள் மனு அளித்தனர்.
இதுகுறித்து கடலுார், கோண்டூர் சிவசக்தி நகர் மக்கள், கலெக்டர் அலுவலகத்தில் அளித்த மனு:
சிவசக்தி நகரில் தனி நபர் ஒருவர், திண்பண்டங்கள் தயாரிப்பு கடை நடத்தி வருகிறார். திண்பண்டங்கள் தயாரிக்கும் போது, மரத்துகள்களை போட்டு எரிப்பதால் போது, புகை மூட்டம் ஏற்படுகிறது.
இதனால் பொதுமக்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்படுவதால் சிரமத்திற்கு ஆளாகின்றனர். அருகில் உள்ள வீடுகளில் கரி படிந்து காணப்படுகிறது. எனவே, கடையை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
