/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
எறும்பூர் - சின்னநற்குணம் சாலை பழுதால் பொதுமக்கள் கடும் அவதி
/
எறும்பூர் - சின்னநற்குணம் சாலை பழுதால் பொதுமக்கள் கடும் அவதி
எறும்பூர் - சின்னநற்குணம் சாலை பழுதால் பொதுமக்கள் கடும் அவதி
எறும்பூர் - சின்னநற்குணம் சாலை பழுதால் பொதுமக்கள் கடும் அவதி
ADDED : மே 26, 2024 05:58 AM

சேத்தியாத்தோப்பு: சேத்தியாத்தோப்பு அடுத்த எறும்பூரிலிருந்து சின்னநற்குணம் செல்லும் சாலை ஜல்லிகள் பெயர்ந்து குண்டும் குழியாக இருப்பதால் கிராம மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
சேத்தியாத்தோப்பு அடுத்த எறும்பூர் வளைவிலிருந்து சின்னநற்குணத்திற்கு பிரிந்து அரசு மேல்நிலைப்பள்ளி வழியாக செல்லும் சாலை உள்ளது. 2 கி.மீ., துாரம் உள்ள இந்த தார் சாலையை பள்ளி மாணவ, மாணவிகள், சின்னநற்குணம் கிராம மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
தற்போது இந்த சாலை முற்றிலும் பழுதாகி ஜல்லிகள் பெயர்ந்து குண்டும் குழியுமாக உள்ளது. இதனால், அந்த வழியாக மாணவ, மாணவிகள் சைக்கிளில் செல்லும்போது பஞ்சராகி விடுகிறது. இரு சக்கர வாகனங்கள் பழுதாகிறது. இதனால், கிராம மக்கள் மற்றும் மாணவ, மாணவியர்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
எனவே பழுதடைந்த இந்த சாலையை சம்மந்தப்பட்ட அதிகாரிகள் ஆய்வு செய்து புதிய தார்சாலை போட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.