/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பண்ருட்டியில் வரும் 27ம் தேதி இ.எஸ்.ஐ., பி.எப்., குறைதீர்வு முகாம்
/
பண்ருட்டியில் வரும் 27ம் தேதி இ.எஸ்.ஐ., பி.எப்., குறைதீர்வு முகாம்
பண்ருட்டியில் வரும் 27ம் தேதி இ.எஸ்.ஐ., பி.எப்., குறைதீர்வு முகாம்
பண்ருட்டியில் வரும் 27ம் தேதி இ.எஸ்.ஐ., பி.எப்., குறைதீர்வு முகாம்
ADDED : பிப் 22, 2025 07:29 AM
கடலுார்; இ.எஸ்.ஐ., மற்றும் வருங்கால வைப்பு நிதி அலுவலகம் சார்பில் பண்ருட்டியில் வரும் 27ம் தேதி குறைதீர்ப்பு முகாம் நடக்கிறது.
தொழிலாளர் அரசு காப்பீட்டு கழக கடலுார் கிளை மேலாளர் லுார்துசாமி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:
தொழிலாளர் அரசு காப்பீட்டு கழக இருவார விழாவை முன்னிட்டு, வருங்கால வைப்பு நிதி அலுவலகத்துடன் இணைந்து நடத்தும் சிறப்பு குறைதீர்ப்பு மற்றும் விழிப்புணர்வு முகாம் வரும் 27ம் தேதி பண்ருட்டியில் உள்ள புனித அன்னாள் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் காலை 9:30 மணி முதல் மாலை 4:30 மணி வரை நடக்கிறது.
இதில் இ.எஸ்.ஐ.சி., கிளை மேலாளர், இ.பி.எப்.ஒ., அதிகாரி கலந்து கொள்ள உள்ளனர். தொழிலாளர்கள் அனைவரும் இந்த சிறப்பு விழிப்புணர்வு முகாமில் கலந்து கொண்டு பயன்பெற கேட்டு கொள்ளப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.