தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ கண் சிகிச்சை முகாம்

கண் சிகிச்சை முகாம்

கண் சிகிச்சை முகாம்


ADDED : மே 14, 2024 05:33 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 14, 2024 05:33 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சிதம்பரம்: சிதம்பரம் மிட் டவுன் ரோட்டரி சங்கம், சிதம்பரம் இன்னர் வீல் சங்கம், புதுச்சேரி அரவிந்த் கண் மருத்துவமனை சார்பில் இலவச கண் சிகிச்சை முகாம் நடந்தது.

சிதம்பரம் ராமகிருஷ்ணா பள்ளியில் நடந்த முகாமிற்கு, சிதம்பரம் மிட்டவுன் ரோட்டரி சங்கத் தலைவர் நிர்மலா தலைமை தாங்கினார். சாசன செயலர் கேசவன் வரவேற்றார்.

இன்னர்வில் சங்கத் தலைவி ஜெசி சைமன், முன்னாள் தலைவர் செல்வி முத்துக்குமரன், செயலர் தேவி திருமுருகன், பொருளாளர் அமுதா பாரி, ராமகிருஷ்ணா, பள்ளி நிர்வாகிகள் பாலசுப்ரமணியன். ராமநாதன், திருநாவுக்கரசு, தலைமை ஆசிரியர் சங்கரன், உதவித் தலைமை ஆசிரியர் சுந்தரி முன்னிலை வகித்தனர். ரோட்டரி மாவட்ட துணை ஆளுநர் கனில்குமார், முன்னாள் துணை ஆளுநர் தீபக்குமார் ஆகியோர் முகாமை தொடங்கி வைத்தனர்.

புதுச்சேரி அரவிந்த் கண் மருத்துவமனை டாக்டர் மாலதி தலைமையில் டாக்டர்கள் அனுஷா, அபர்ணா, ஹரி உள்ளிட்ட மருத்துவக் குழுவினர சிகிச்சை அளித்தனர்.

இதில், 375 பேருக்கு கண் பரிசோதனை செய்யப்பட்டனர். அறுவை சிகிச்சைக்கு தேர்வு செய்யப்பட்ட 175 பேர் அரவிந்த் கண் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us