ADDED : ஜூலை 03, 2026 08:11 PM
காட்டுமன்னார்கோவில்: காட்டுமன்னார்கோவில், வட்டார தமிழ்நாடு அரசு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை மற்றும் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை சார்பில், விவசாயிகளுக்கு பருத்தியில் ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை ‘பண்ணை பள்ளி’ நிகழ்ச்சி மோவூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம் வளாகத்தில் நேற்று நடந்தது.
நிகழ்ச்சிக்கு முன்னோடி விவசாயி கந்தசாமி தலைமை தாங்கினார். பெரம்பலுார் மாவட்டம், வேப்பந்தட்டை பருத்தி ஆராய்ச்சி நிலைய பேராசிரியர் பாரதிராஜா, பங்கேற்று விவசாயிகளுக்கு பருத்தி விதை மேலாண்மை, களை மேலாண்மை, நீர் மற்றும் வறட்சி மேலாண்மை, பூச்சு மேலாண்மை குறித்து கருத்துரை வழங்கினார். மேலும் பருத்தி சாகுபடியில் காய்புழு கட்டுப்படுத்துதல், அதிக மகசூல் தரும் ரகம், வீரிய ஒட்டு ரகம் போன்றவை குறித்து விளக்கி பேசினார். விவசாயிகளுக்கு பருத்தியில் ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை கையேடு குறித்த வழங்கப்பட்டது.
பருத்து சாகுபடி வயலில் காய் புழு தாக்குதல், சாகுபடி மேலாண்மை குறித்து நேரடி செயல் விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது.
நிகழ்ச்சியில் வேளாண்மை துறை ஆட்மா திட்ட தொழில்நுட்ப அலுவலர் கதிர்காமன், உதவி அலுவலர் சந்தானகிருஷ்ணன், முன்னோடி விவசாயிகள் கோவிந்தசாமி, சேதுராமன், முரளி, சின்னதுரை உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.
