ADDED : செப் 15, 2024 07:01 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புவனகிரி: புவனகிரி அருகே நாய் துரத்தியதால் பைக்கில் இருந்து விழுந்த விவசாயி உயிரிழந்தார்.
புவனகிரி அருகே வடஹரிராஜபுரத்தை சேர்ந்தவர் வெங்கடேஷ்,42; விவசாயி.
நேற்று முன்தினம் இரவு 9:30 மணியளவில், கீரப்பாளையத்தில் இருந்து வீட்டிற்கு பைக்கில் சென்றார். மேலக்கீரப்பாளையம் கண்ணன் கோவில் அருகில் சென்றபோது, அப்பகுதியில் சுற்றித்திரிந்த நாய் துரத்தியுள்ளது. இதனால், தவறி விழுந்தவர் பலத்த அடிபட்டு மயங்கி கிடந்தார்.
அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சிதம்பரம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு நேற்று அதிகாலையில் இறந்தார்.
இதுகுறித்து வெங்கடேஷ் மனைவி கலைவாணி கொடுத்த புகாரில், புவனகிரி போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.