ADDED : மார் 07, 2025 07:12 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நெல்லிக்குப்பம், நெல்லிக்குப்பம் வாழப்பட்டை சேர்ந்த விவசாயி கோபால், 80 உடல்நலக் குறைவால் இறந்தார்.அவரது கண்களை தானமாக வழங்க, அவரது மகன்கள் பெருமாள், ஜலபதி, மகள்கள் முத்துலட்சுமி, மின்னல்கொடி, மருமகள் கார்குழலி முன்வந்தனர்.
அதையடுத்து, அரிமா சங்க பொருளாளர் கார்த்தி முயற்சியால், கடலூர் அரசு மருத்துவமனை கண் டாக்டர் சிவா தலைமையிலான மருத்துவ குழுவினர் முதியவரின் கண்களை தானமாக பெற்று புதுச்சேரி அரவிந்த் கண் மருத்துவமனைக்கு வழங்கினர்.