/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பூதாமூர் மணிமுக்தாற்றில் தடுப்பணை குறைகேட்பு கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை
/
பூதாமூர் மணிமுக்தாற்றில் தடுப்பணை குறைகேட்பு கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை
பூதாமூர் மணிமுக்தாற்றில் தடுப்பணை குறைகேட்பு கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை
பூதாமூர் மணிமுக்தாற்றில் தடுப்பணை குறைகேட்பு கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை
ADDED : ஜூலை 13, 2024 12:40 AM

விருத்தாசலம்: 'விருத்தாசலம் பூதாமூர் பகுதியில் உள்ள மணிமுக்தாற்றில் தடுப்பணை கட்ட வேண்டும்' என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
விருத்தாசலம் ஆர்.டி.ஓ., அலுலகத்தில் நேற்று விவசாயிகள் குறைகேட்புக் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு, ஆர்.டி.ஓ., சையத் மெஹ்மூத் தலைமை தாங்கினார்.
நேர்முக உதவியாளர் செல்வமணி முன்னிலை வகித்தார். பல்வேறு துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.
கூட்டத்தில் விவசாயிகள் பேசியதாவது:
பல்வேறு துறைகளை சேர்ந்த அதிகாரிகள் கூட்டத்தில் பங்கேற்கவில்லை. இதனால், எங்கள் கோரிக்கைகள் எப்படி நிறைவேறும் என்பதை அதிகாரிகள் விளக்க வேண்டும். கோமங்கலத்தில் முறையான அறிவிப்பு இல்லாமல் அடிக்கடி மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.
இதனால் விவசாயம் செய்ய முடியாத நிலை ஏற்படுகிறது. விருத்தாசலத்தில் உள்ள வேளாண் பொறியியல் துறை சார்பில், நெல் அறுவடை இயந்திரம் விவசாயிகளுக்கு வழங்கப்படுவது இல்லை.
விருத்தாசலம் புதுக்கூரைப்பேட்டை பகுதியில் அமைக்கப்பட்டுள்ள மேம்பாலத்தில் முறையான வடிகால் அமைக்கவில்லை.இதனால் குடியிருப்பு பகுதிக்குள் மழை நீர் புகுந்து பாதிப்பை ஏற்படுத்துகிறது.
இதற்கு உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும். குப்பநத்தம் - உளுந்துார்பேட்டை புறவழிச்சாலை பல ஆண்டுகளாக சேதமடைந்துபோக்குவரத்திற்கு லாய்க்கற்ற நிலையில் உள்ளது.
இவ்வாறு விவசாயிகள் பேசினர்.
இதற்கு பதில் அளித்த ஆர்.டி.ஓ., கலெக்டரின் சாலை பாதுகாப்பு குறித்த கூட்டத்தில் இது குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது. உடன் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். அதனைத் தொடர்ந்து, மணிமுக்தாறு நீர்பாசன விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் தங்க தனவேல் தலைமையில், விவசாயிகள் ஆர்.டி.ஓ.,விடம் அளித்த மனு:
தற்போது, விருத்தாசலம் நகரில் குடிநீர் தட்டுப்பாடு உள்ளது. மழைக்காலங்களில் ஆற்றில் வரும் தண்ணீர் முழுதும் தடுப்பணை இல்லாததால்,கடலுக்கு சென்று வீணாக கலக்கிறது.
மேலும், பூதாமூர் பகுதியில் பல ஆயிரம் ஏக்கர் பரபரப்பளவில் விவசாயம் நடக்கிறது.
எனவே, பூதாமூர் பகுதியில் தடுப்பணை கட்டினால், நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து, விவசாயிகள், பொதுமக்கள் பயன்பெறுவர் என மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.
மனுவைப் பெற்றுக் கொண்ட ஆர்.டி.ஓ., நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.