sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

மார்க்கெட் கமிட்டி வாயிற்கதவை பூட்டி விவசாயிகள் தர்ணா: விருதையில் பரபரப்பு விருத்தாசலம் மார்க்கெட் கமிட்டியில் பரபரப்பு

/

மார்க்கெட் கமிட்டி வாயிற்கதவை பூட்டி விவசாயிகள் தர்ணா: விருதையில் பரபரப்பு விருத்தாசலம் மார்க்கெட் கமிட்டியில் பரபரப்பு

மார்க்கெட் கமிட்டி வாயிற்கதவை பூட்டி விவசாயிகள் தர்ணா: விருதையில் பரபரப்பு விருத்தாசலம் மார்க்கெட் கமிட்டியில் பரபரப்பு

மார்க்கெட் கமிட்டி வாயிற்கதவை பூட்டி விவசாயிகள் தர்ணா: விருதையில் பரபரப்பு விருத்தாசலம் மார்க்கெட் கமிட்டியில் பரபரப்பு


ADDED : ஆக 06, 2024 07:09 AM

Google News

ADDED : ஆக 06, 2024 07:09 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருத்தாசலம் : விருத்தாசலம் மார்க்கெட் கமிட்டியில் வாயிற்கதவை பூட்டி, விவசாயிகள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.

விருத்தாசலம் மார்க்கெட் கமிட்டிக்கு குறுவை அறுவடை தீவிரமடைந்து, நெல் மூட்டைகள் வரத்து அதிகரித்துள்ளது. தினசரி நெல், எள், வேர்க்கடலை உட்பட 10 ஆயிரத்திற்கும் அதிகமான மூட்டை வேளாண் விளைபொருட்கள் கொள்முதல் செய்யப்படுகின்றன.

இந்நிலையில், கடந்த வாரம் கொள்முதல் செய்யப்பட்ட விளைபொருட்களுக்கு உரிய பணப்பட்டுவாடா செய்யப்படவில்லை எனக் கூறி, நேற்று, விவசாயிகள் சிலர் வாயிற்கதவை பூட்டி தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

விருத்தாசலம் சப் இன்ஸ்பெக்டர் சந்துரு தலைமையிலான போலீசார் அவர்களை சமாதானம் செய்தனர். அப்போது, உரிய காலத்தில் பணம் வழங்காமல் காலம் தாழ்த்துவதால், வெளியூர் விவசாயிகளுக்கு அலைச்சல் ஏற்படுகிறது.

பல இடையூறுகளுக்கு இடையே விவசாயம் செய்யும் விவசாயிகளை அலைக்கழிப்பது முறையா என வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து, கமிட்டி கண்காணிப்பாளர் குமரகுருபரன் முன்னிலையில் பேச்சு வார்த்தை நடந்தது.

அப்போது, கமிட்டியில் ஆன்லைன் முறையில் மறைமுக ஏலம் நடப்பதால், ஒரே வியாபாரி 1 கோடி ரூபாய் மதிப்பிலான 6,000 மூட்டைகள் வேளாண் விளைபொருட்களை கொள்முதல் செய்துள்ளார்.

அதில், 50 லட்சம் ரூபாய் வரை வழங்கியுள்ளார். அந்தத் தொகையை, முதற்கட்டமாக விவசாயிகள் வங்கிக் கணக்கில் போட்டுள்ளோம்.

மீதமுள்ள தொகையை இரண்டு நாட்களில் வழங்குவதாக உறுதியளித்துள்ளார்.

எனவே, இரண்டு நாட்களில் விவசாயிகளுக்கு பட்டுவாடா செய்யப்பட்டு விடும் என கண்காணிப்பாளர் தெரிவித்தார். இதையேற்று விவசாயிகள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால், கமிட்டி வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.






      Dinamalar
      Follow us