/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறப்பு பெண்ணாடம் பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி
/
நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறப்பு பெண்ணாடம் பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி
நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறப்பு பெண்ணாடம் பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி
நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறப்பு பெண்ணாடம் பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி
ADDED : ஜூலை 06, 2024 04:56 AM

பெண்ணாடம்: 'தினமலர்' நாளிதழ் செய்தி எதிரொலியாக முதற்கட்டமாக மாளிகைக்கோட்டத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் நேற்று துவங்கப்பட்டது.
பெண்ணாடம் மற்றும் சுற்றியுள்ள மாளிகைக்கோட்டம், தாழநல்லூர், கிளிமங்கலம், திருமலை அகரம், கோனூர், வடகரை, நந்திமங்கலம், செம்பேரி, சவுந்திரசோழபுரம், இறையூர், கொத்தட்டை உட்பட 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் ஆயிரம் ஏக்கருக்கு மேல் விவசாயிகள் குறுவை நெல் நடவு செய்திருந்தனர். ஆண்டுதோறும் குறுவை அறுவடையின் போது தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் சார்பில் முன்கூட்டியே மாவட்டத்தில் அந்தந்த முக்கிய பகுதிகளில் நெல் கொள்முதல் நிலையங்கள் திறப்பது வழக்கம்.
கடந்த சில நாட்களாக பெண்ணாடம் பகுதியில் குறுவை நெல் அறுவடை பணிகள் துவங்கி, நடந்து வருகிறது. அதன்படி, மாளிகைக்கோட்டத்தில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கும் என்ற நம்பிக்கையில் குறுவை நெல்லை முன்பதிவிற்காக கொள்முதல் நிலையத்தில் நெல்லை கொட்டி வைத்து, விவசாயிகள் காத்திருந்தனர்.
அதனைச் சுட்டிக்காட்டி, நேற்று முன்தினம் 'தினமலர்' நாளிதழில் விரிவான செய்தி வெளியானது. அதைத்தொடர்ந்து, மாளிகைக்கோட்டத்தில் முதற்கட்டமாக நேற்று நேரடி நெல் கொள்முதல் நிலையம் துவங்கப்பட்டு, கொள்முதல் பணி நடந்தது. இதனால் பெண்ணாடம் பகுதி கிராம விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.