ADDED : மே 27, 2026 04:40 PM
அ நிறம் | அளவு
வேப்பூர்: முழுமையான பயிர் கடனை தள்ளுபடி செய்யக்கோரி தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாய சங்கம் சார்பில், வேப்பூர் கூட்டுரோட்டில் ஆர்ப்பாட்டம் நடந்தது. சங்கத்தின் வேப்பூர் வட்டார தலைவர் ராஜா தலைமை தாங்கினார்.
இதில், 30க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்றனர். இதில், முதல்வர் விஜய் தேர்தல் அறிக்கையில் கூறியது போல, 5 ஏக்கர் நிலம் வைத்துள்ள குறு விவசாயிகளுக்கு முழுமையாக பயிர்கடன் தள்ளுபடி செய்ய வேண்டும்; 5 ஏக்கருக்கு மேல் நிலம் வைத்துள்ள விவசாயிகளுக்கு, 50 சதவீதம் தள்ளுபடி செய்ய வேண்டும்; என கூறி, முதல்வரை கண்டித்து கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
