ADDED : ஜூலை 18, 2026 06:11 PM

அ நிறம் | அளவு
பெண்ணாடம், ஜூலை 19–
நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கக்கோரி, விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பெண்ணாடம் அடுத்த முருகன்குடியில் சம்பா, குறுவை அறுவடையின் போது, தமிழக நுகர்பொருள் வாணிப கழகம் சார்பில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறப்பது வழக்கம்.
அதில், நடப்பு குறுவை பட்டத்திற்கு சுற்றியுள்ள கிராம விவசாயிகள் அறுவடை செய்த குறுவை நெல்லை கொட்டியும், மூட்டைகளாகவும் வைத்து காத்திருக்கின்றனர். ஆனால், இதுவரை நெல் கொள்முதல் நிலையம் திறக்கவில்லை.
இதனால் ஆத்திரமடைந்த விவசாயிகள் நேற்று காலை 9:30 மணியளவில் நெல் கொள்முதல் நிலையத்தை விரைந்து திறக்க வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர், 9:45 மணியளவில் விவசாயிகள் அவர்களாகவே கலைந்து சென்றனர்.
இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
