ADDED : ஜூன் 18, 2026 05:51 PM

அ நிறம் | அளவு
கடலுார்: கடலுார் கலெக்டர் அலுவலகம் முன், தமிழக ஏரி மற்றும் ஆற்றுப்பாசன விவசாயிகள் சங்கத்தினர் பயிர்க்கடனை முழுமையாக தள்ளுபடி செய்யக்கோரி திருவோடு ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்திற்கு தமிழக ஏரி மற்றும் ஆற்றுப்பாசன விவசாயிகள் சங்க மாநிலத்தலைவர் விசுவநாதன் தலைமை தாங்கினார்.
ஆர்ப்பாட்டத்தில், முதல்வர் விஜய் வாக்குறுதியின்படி, 5 ஏக்கருக்கு கீழ் உள்ள விவசாயிகளுக்கு, 100 சதவீத பயிர்க்கடனையும், 5 ஏக்கருக்கு மேல் உள்ள விவசாயிகளுக்கு 50 சதவீத பயிர்க்கடனையும் தள்ளுபடி செய்ய வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற விவசாயிகள் முக்காடு போட்டு, கையில் திருவோடு ஏந்தி நுாதன முறையில் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.
