/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பெஞ்சல் புயல் நிவாரண தொகை எதிர்பார்ப்பு; வங்கிக்கு நடையாய் நடக்கும் விவசாயிகள்

ADDED : மார் 04, 2025 06:52 AM

சேத்தியாத்தோப்பு,; பெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு அறிவித்த நிவாரண தொகை எதிர்பார்த்து விவசாயிகள் தினந்தோறும் வங்கிக்கு நடையாய் நடந்து வருகின்றனர்.
கடந்த ஆண்டு நவ., மற்றும் டிசம்பர் மாதம் பெஞ்சல் புயல் காரணமாக வரலாறு காணாத அதிகனமழை பெய்தது. கடலுார் மாவட்டத்தில் சிதம்பரம், புவனகிரி, காட்டுமன்னார்கோவில், விருத்தாசலம், ஸ்ரீமுஷ்ணம், பரங்கிப்பேட்டை, பண்ருட்டி, குறிஞ்சிப்பாடி உள்ளிட்ட மக்கள் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. பெஞ்சல் புயலை இயற்கை பேரிடராக அறிவித்து, சம்பா பருவதிற்கு பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு நிவாரணம் அறிவிக்கப்பட்டது.
மானாவாரி பயிருக்கு ஹெக்டேருக்கு ரூ. 8,500, நெற்பயிர் ஹெக்டேருக்கு ரூ. 17,000, நீண்ட கால பயிருக்கு ரூ. 22,500 என நிவாரணம் அறிவிக்கப்பட்டது. பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு இழப்பீடு நிவாணத்தொகை வழங்க வருவாய்த்துறை, வேளாண்துறை இணைந்து கணக்கெடுப்பு நடத்தியது. புயல் ஒய்ந்து 3 மாதம் கடந்தும் இதுவரை விவசாயிகளுக்கு நிவாரண தொகை கிடைக்கவில்லை.
விரைவில் நிவாரண தொகை விவசாயிகள் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டதால், கடலுார் மாவட்ட விவசாயிகள் தினமும் வங்கிகளுக்கு சென்று பணம் வந்து விட்டதா என பார்த்து ஏமாற்றத்துடன் திரும்பி வருகின்றனர்.