/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
நடராஜர் கோவிலில் தரிசனத்திற்கு பணம் கேட்டதாக பெண் பக்தர் புகார்
/
நடராஜர் கோவிலில் தரிசனத்திற்கு பணம் கேட்டதாக பெண் பக்தர் புகார்
நடராஜர் கோவிலில் தரிசனத்திற்கு பணம் கேட்டதாக பெண் பக்தர் புகார்
நடராஜர் கோவிலில் தரிசனத்திற்கு பணம் கேட்டதாக பெண் பக்தர் புகார்
ADDED : செப் 13, 2024 06:16 AM
சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோவிலில் கனகசபை மீது ஏறி தரிசனம் செய்ய, பணம் கேட்டதாக, கோவை பெண் பக்தர் ஒருவர் போலீசில் புகார் அளித்துள்ளார்.
கடலுார் மாவட்டம், சிதம்பரம் நடராஜர் கோவிலை பொது தீட்சிதர்கள் நிர்வகித்து வருகின்றனர். கடந்த ஓராண்டுக்கும் மேலாக, தமிழக அரசின் அறநிலையத் துறைக்கும், நடராஜர் கோவில் நிர்வாகத்திற்கும் மோதல் போக்கு இருந்து வருகிறது. இது தொடர்பாக சென்னை ஐகோர்ட்டில் வழக்கு நடந்து வருகிறது.
சமீபத்தில், நடராஜர் கோவில் கனகசபை மீதேறி பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய தடையில்லை என சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டது.
இந்நிலையில், நேற்று கோவிலுக்கு வந்த கோவையை சேர்ந்த ரமாபிரபா என்பவர், கனகசபை மீது ஏறி தரிசனம் செய்ய முயன்றார். அங்கிருந்த பாதுகாவலர், 'தீட்சிதரிடம் 200 ரூபாய் கட்டி சீட்டு வாங்கினால்தான் கனகசபையில் அனுமதிக்க முடியும்' என கூறி தடுத்துள்ளார்.
'நீதிமன்றம் உத்தரவிட்டும், ஏன் பணம் கேட்கிறீர்கள்' என அந்த பெண் வாக்குவாதத்தில் ஈடுபட்டுவிட்டு சென்றுவிட்டார்.
இதுகுறித்து ஆன்லைனில் சிதம்பரம் நகர போலீஸ் நிலையத்தில், ரமாபிரபா புகார் அளித்துள்ளார்.