நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புவனகிரி: புவனகிரி அருகே திருமணம் ஏற்பாடு செய்த நிலையில் பட்டதாரி பெண் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
புவனகிரி அடுத்த சாத்தப்பாடி இந்திரா நகரைச் சேர்ந்தவர் சங்கர்; கூலித்தொழிலாளி. இவரது மகள் சங்கீதா, 22; பி.காம் பட்டதாரியான இருவருக்கு உறவினர் மாப்பிள்ளையை திருமணம் பேசி முடிவு செய்தனர்.
நேற்று முன்தினம் சங்கீதாவின் பெற்றோர் 100 நாள் வேலைக்கு சென்றனர். மாலையில் வீட்டிற்கு வந்த போது, உள் பக்கம் தாழிடப்பட்டிருந்தது. சந்தேகமடைந்து வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது சங்கீதா, துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. புகாரின் பேரில், புவனகிரி போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.