ADDED : ஆக 10, 2026 07:42 PM
மந்தாரக்குப்பம்: மந்தாரக்குப்பம் அடுத்த ரோமாபுரி கிராமத்தில் பெண் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்து தற்கொலை செய்து கொண்டாா்.
குறிஞ்சிப்பாடி பெரியகோவில்குப்பம் பகுதியை சேர்ந்தவர் அன்பரசி, 30; இவருக்கு கடந்த 2018 ம் ஆண்டு ரோமாபுரியை சேர்ந்த ராஜசேகர் என்பவருடன் திருமணம் நடைபெற்று 3 வயதில் ஆண் குழந்தை உள்ளது. கடந்த சில நாட்களாக அன்பரசி மன உளைச்சலில் இருந்து வந்தார்.
இந்நிலையில் கடந்த 9 ம் தேதியன்று வீட்டில் இருந்த மண்ணெண்ணையை ஊற்றி தீ வைத்துக்கொண்டார். உடனே அருகில் இருந்தவர்கள் அன்பரசியை மீட்டு விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின் மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மரில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார்
இது குறித்து மந்தாரக்குப்பம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
