ADDED : ஆக 08, 2024 12:53 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிதம்பரம், : சிதம்பரம் தில்லை காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ஞானசேகர். அவரது மனைவி கார்த்திகா, 29: திருமணமாகி 5 ஆண்டுகள் ஆகிறது. ஒன்றறை வயதில் பெண் குழந்தை உள்ளது.
இந்நிலையில், கணவன் மனைவியிடையே அடிக்கடி குடும்ப பிரச்னை இருந்து வந்தது. இதில் மனமுடைந்த கார்த்திகா, கடந்த 6 ம் தேதி, வீட்டில் மின்விசிறியில் துாக்குபோட்டு தற்கொலைக்கு முயன்றார். அருகில் உள்ளவர்கள் மீட்டு, சிதம்பரம் மாவட்ட மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் இறந்தார்.
இது குறித்து கார்த்திகாவின் தந்தை கருணாநிதி,தனது மகள் சாவில் சந்தேகம் இருப்பதாக, சிதம்பரம் நகர போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர். வரதட்சணை கொடுமையாக இருக்கலாம் என்பதால், சப் கலெக்டர் விசாரணை நடத்தி வருகிறார்.