/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கொளஞ்சியப்பர் கல்லுாரியில் இறுதிக் கட்ட கலந்தாய்வு
/
கொளஞ்சியப்பர் கல்லுாரியில் இறுதிக் கட்ட கலந்தாய்வு
கொளஞ்சியப்பர் கல்லுாரியில் இறுதிக் கட்ட கலந்தாய்வு
கொளஞ்சியப்பர் கல்லுாரியில் இறுதிக் கட்ட கலந்தாய்வு
ADDED : ஜூலை 27, 2024 02:49 AM
விருத்தாசலம்: விருத்தாசலம் கொளஞ்சியப்பர் அரசு கலைக் கல்லுாரியில் 2024 - 25ம் கல்வியாண்டின் இளங்கலை மாணவர்களுக்கான இறுதிக் கட்ட கலந்தாய்வு வரும் 29ம் தேதி துவங்கி வரும் 31ம் தேதி வரை நடக்கிறது.
கல்லுாரி முதல்வர் (பொறுப்பு) சுரேஷ்குமார் செய்திக்குறிப்பு:
வரும் 29ம் தேதி பி.எஸ்சி., கணிதம், இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல், கணினி அறிவியல் ஆகிய பாட பிரிவுகளுக்கும், வரும் 30ம் தேதி பி.காம்., - பி.பி.ஏ., - பி.ஏ., வரலாறு, பொருளாதாரம் ஆகிய பாட பிரிவுகளுக்கும், வரும் 31ம் தேதி பி.ஏ., தமிழ், ஆங்கிலம் ஆகிய பாடபிரிவுகளுக்கு இறுதிக்கட்ட கலந்தாய்வு நடக்கிறது.
கலந்தாய்விற்கு வரும் மாணவர்கள் கல்விச்சான்றிதழ், ஜாதிச் சான்றிதழ், அண்மையில் எடுக்கப்பட்ட பாஸ்போர்ட் சைஸ் போட்டோ, ஆதார் அட்டை மற்றும் பேங்க் பாஸ் புக் ஆகியவற்றின் ஒரிஜினல் மற்றும் 3 செட் ஜெராக்ஸ் எடுத்து வர வேண்டும்.
உடன் இணைய வழியில் விண்ணப்ப பிரதியையும், கலந்தாய்வு நடக்கும் தேதிகளில் காலை 9:30 மணிக்கு எடுத்து வர வேண்டும்.
இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

