/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
உங்களை தேடி உங்கள் ஊரில் திட்டம்; விருத்தாசலத்தில் கலெக்டர் ஆய்வு
/
உங்களை தேடி உங்கள் ஊரில் திட்டம்; விருத்தாசலத்தில் கலெக்டர் ஆய்வு
உங்களை தேடி உங்கள் ஊரில் திட்டம்; விருத்தாசலத்தில் கலெக்டர் ஆய்வு
உங்களை தேடி உங்கள் ஊரில் திட்டம்; விருத்தாசலத்தில் கலெக்டர் ஆய்வு
ADDED : ஆக 23, 2024 12:37 AM

விருத்தாசலம் : உங்களை தேடி உங்கள் ஊரில் திட்டத்தில், விருத்தாசலம், மங்கலம்பேட்டை பகுதிகளில் கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் ஆய்வு மேற்கொண்டார்.
விருத்தாசலம் நகராட்சி பூதாமூர் நடுநிலை பள்ளி வளாகத்தில் உள்ள அங்கன்வாடி மையம், மத்திய கூட்டுறவு வங்கி மற்றும் காந்திநகர், புதுக்குப்பம், வயலுார் பகுதியில் நடக்கும் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.
குறைந்த தேர்ச்சி விகிதம் பெற்ற கருவேப்பிலங்குறிச்சி அரசு மேல்நிலைபள்ளியில் ஆய்வு செய்தார். அப்போது மாணவர்களுடன் கலந்துரையாடி மாணவர்களின் அடிப்படை வசதிகள், தேர்ச்சி விகிதம் குறைவதற்கான காரணங்கள் குறித்து ஆசிரியர்களிடம் கேட்டறிந்தார்.
அதன்பின், பெரியவடவாடி, விஜயமாநகரம், கோ.பூவனுார், ரூபநாராயணநல்லுார்ஆகிய கிராமங்களில் நடக்கும் வளர்ச்சி திட்ட பணிகளை ஆய்வு செய்தார். விருத்தாசலம் மார்க்கெட் கமிட்டியில் விவசாயிகளிடம் குறைகள் கேட்டறிந்தார். அதன்பின், பெரியார் நகர் பகுதியில் உள்ள நுகர் பொருள் வாணிப கழக கிடங்கில் ஆய்வு மேற்கொண்டார்.
விருத்தாசலம் போலீஸ் ஸ்டேஷனில், எஸ்.பி., ராஜாராம் மற்றும் போலீசாருடன், சட்டம் ஒழுங்கு குறித்து ஆய்வு நடத்தினார். ஆய்வில், நகராட்சி சேர்மன் சங்கவி முருகதாஸ், நகராட்சி கமிஷனர் ப்ரீத்தி, ஆர்.டி.ஓ., சையத் மெஹ்மூத், தாசில்தார் உதயகுமார், டி.இ.ஓ., துரைப்பாண்டியன் மற்றும் வருவாய்துறை, நகராட்சி அதிகாரிகள் பலர் பங்கேற்றனர்.

