/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
திருடியபோது சிக்கிய கை விரல் ஆத்திரத்தில் வாகனங்களுக்கு தீ
/
திருடியபோது சிக்கிய கை விரல் ஆத்திரத்தில் வாகனங்களுக்கு தீ
திருடியபோது சிக்கிய கை விரல் ஆத்திரத்தில் வாகனங்களுக்கு தீ
திருடியபோது சிக்கிய கை விரல் ஆத்திரத்தில் வாகனங்களுக்கு தீ
ADDED : மே 10, 2024 11:06 PM
சிதம்பரம்,:சிதம்பரம், துறவடி தெருவைச்சேர்ந்தவர் கார்த்தி; டிராவல்ஸ் உரிமையாளர். கடந்த 8ம் தேதி இரவு, இவரது வீட்டின் வெளியே நிறுத்தியிருந்த பைக், ஸ்கூட்டி, கார் மற்றும் டெம்போ டிராவலர் வேன் மர்மான முறையில் எரிந்து சேதமடைந்தன.
புகாரின்படி, சிதம்பரம் நகர போலீசார் வழக்கு பதிந்து, அப்பகுதியில் இருந்த 'சிசிடிவி' பதிவுகளை ஆய்வு செய்து, கஸ்பா தெருவைச்சேர்ந்த 15 வயது சிறுவனை பிடித்து விசாரித்தனர்.
அதில் சிறுவன், சம்பவத்தன்று பைக் ஒன்றை திருடிக் கொண்டு வந்தபோது பெட்ரோல் தீர்ந்ததால், கார்த்தி வீட்டின் முன் நின்றிருந்த பைக்கில் பெட்ரோல் திருடினார். பின்னர், அருகில் இருந்த ஸ்கூட்டியில் திருட, சீட்டை திறக்க இன்ஜின் அடிப்பகுதியில் கையை நுழைத்தபோது, கை விரல் சிக்கி, காயம் ஏற்பட்டுள்ளது.
அதில் ஆத்திரமடைந்த சிறுவன் பாட்டிலில் வைத்திருந்த பெட்ரோலை, வாகனங்கள் மீது ஊற்றி தீ வைத்ததை ஒப்புக் கொண்டார். போலீசார் வழக்கு பதிந்து சிறுவனை கடலுாரில் உள்ள சிறார் காப்பகத்தில் ஒப்படைத்தனர்.