ADDED : ஏப் 21, 2024 05:54 AM

கடலுார்: தீ தொண்டு வார விழாவையொட்டி, கடலுாரில் தீயணைப்பு வீரர்களின் விழிப்புணர்வு வாகன பேரணி நடந்தது.
தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை சார்பில் ஏப்., 14 முதல் 20ம் தேதி வரை 'தீ தொண்டு வார விழா' கடைபிடிக்கப்படுகிறது. அதையொட்டி நேற்று கடலூர் தீயணைப்பு துறை சார்பில் விழிப்புணர்வு பேரணி நடந்தது. தீயணைப்பு துறை உதவி மாவட்ட அலுவலர் விஜயகுமார் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
பேரணியில் தீயணைப்பு படை வீரர்கள் இரு சக்கர வாகனங்களில் பதாகைகளை ஏந்தியபடி, தீயில் இருந்து பாதுகாக்கும் வழிமுறைகள் குறித்து பொதுமக்கள் இடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி சென்றனர். சில்வர் பீச் கடற்கரை சாலையில் துவங்கிய பேரணி, வண்ணாரபாளையம் தேவனாம்பட்டினம் வழியாக மீண்டும் தீயணைப்பு நிலையத்தை வந்ததடைந்தது. நிகழ்ச்சியில் உதவி மாவட்ட அலுவலர் ஆறுமுகம், தீயணைப்பு துறை சிறப்பு நிலை அலுவலர் ராஜசேகரன், வீரமணி மற்றும் தீயணைப்பு படை வீரர்கள் பங்கேற்றனர்.
