/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
தீ விபத்து: சேர்மன் நிவாரணம் வழங்கல்
/
தீ விபத்து: சேர்மன் நிவாரணம் வழங்கல்
ADDED : ஜூலை 06, 2024 05:06 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நெல்லிக்குப்பம்: நெல்லிக்குப்பத்தில் தீவிபத்தில் வீடுகளை இழந்தவர்களுக்கு சேர்மன் ஜெயந்தி நிவாரணம் வழங்கினார்.
நெல்லிக்குப்பம் கைலாசநாதர் கோவில் பகுதியில் முருகன் கோவில் அருகே வசித்து வருபவர்கள் ஜோதிமணி,ராமலிங்கம்.இவர்கள் இருவரது கூரை வீடுகளும் மின்கசிவு காரணமாக தீப்பிடித்து எரிந்து சேதமானது.
இதையறிந்த சேர்மன் ஜெயந்தி தீவிபத்தில் வீடுகளை இழந்தவர்களுக்கு வேட்டி,சேலை,அரிசி மற்றும் நிவாரண உதவிகளை வழங்கினார்.தி.மு.க., இளைஞரணி துணை அமைப்பாளர் ராஜா, கவுன்சிலர்கள் சரவணன், ஸ்ரீதர், பூபாலன், பொருளாளர் ஜெயசீலன், மாவட்ட பிரிதிநிதிகள் வேலு, வீரமணி, கதிரேசன் உட்பட பலர் உடனிருந்தனர்.