நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வடலுார் : வடலுார் அடுத்த கருங்குழி தர்மராஜா திரவுபதி அம்மன் கோவிலில் தீமிதி திருவிழா நடந்தது.
விழாவையொட்டி, கடந்த மாதம் 15ம் தேதி மாலை கோட்டகம் கிராமத்தில் இருந்து தீர்த்தம் கொண்டு வந்து காப்பு கட்டும் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து தினமும் இரவில் பாரத கதை சொற்பொழிவு மற்றும் சுவாமி வீதியுலா நடந்தது.
நேற்று முன்தினம் தீமிதி விழாவை முன்னிட்டு காலை 8:00 மணிக்கு அரவான் களபலியும், மாலை 3:00 மணிக்கு பாஞ்சாலி தேவியார் கூந்தல் முடித்தல், தொடர்ந்து நடந்த தீமிதி திருவிழாவில் திரளான பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.