/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பொதுத்தேர்வில் முதலிடம்: ஊராட்சி தலைவர் உதவி
/
பொதுத்தேர்வில் முதலிடம்: ஊராட்சி தலைவர் உதவி
ADDED : ஆக 02, 2024 10:33 PM

சிதம்பரம்,- பொது தேர்வில் முதலிடம் பெற்ற குமராட்சி அரசு பள்ளி மாணவிகளுக்கு மொபைல் போன் மற்றும் சைக்கிள் பரிசை ஊராட்சி மன்ற தலைவர் தமிழ்வாணன் வழங்கினார்.
குமராட்சி அரசு மேல் நிலைப் பள்ளியில், 10 மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசு வழங்கும் விழா நடந்தது. ஒவ்வொறு ஆண்டுகள் முதலிடம் பிடிக்கு மாணவர்களுக்கு ஊராட்சித் தலைவர் தமிழ்வாணன் பரிசு வழங்கி வருகிறார்.
அந்த வகையில், நடந்து முடிந்த பிளஸ் 2 பொது தேர்வில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவி கவிப்பிரியாவுக்கு 13 ஆயிரம் மதிப்புள்ள ஆண்ட்ராய்டு மொபைல் போன், 10 ம் வகுப்பு தேர்வில், முதல் மதிப்பெண் பெற்ற மாணவி அபிதாவிற்கு சைக்கிள் ஆகியவற்றை ஊராட்சி தலைவர் தமிழ்நாணன் தனது சொந்த செலவில் வழங்கினார்.
அப்போது பள்ளிதலைமை ஆசிரியர் திருமுருகன் துணைத் தலைமை ஆசிரியர் சுப்பிரமணியன், ஆசிரியர் கலைவாணன், பாலசுப்பிரமணியன் லாவண்யா, ஊராட்சி வார்டு உறுப்பினர் ராஜமலையசிம்மன் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.