எம்.ஆர.கே பொறியியல் கல்லுாரியில் முதலாம் ஆண்டு வகுப்பு துவக்கம்
எம்.ஆர.கே பொறியியல் கல்லுாரியில் முதலாம் ஆண்டு வகுப்பு துவக்கம்
ADDED : செப் 10, 2026 07:14 PM
அ நிறம் | அளவு
சிதம்பரம், செப். 11 –
காட்டுமன்னார்கோவில் எம்.ஆர்.கே., கல்லுாரியில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான வகுப்பு துவக்க விழா நடந்தது.
விழாவிற்கு சேர்மன் கதிரவன் தலைமை தாங்கி முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான வகுப்பை துவக்கி வைத்தார். நிர்வாக அலுவலர் கோகுலக்கண்ணன், மேலாளர் விஸ்வநாத் முன்னிலை வகித்தனர். கல்லூரி முதல்வர் ஆனந்தவேலு வரவேற்றார். முதலாம் ஆண்டு மாணவிகள் குத்து விளக்கேற்றினர்.
எபெக்ட் பப்ளிக் ஸ்பீக்கிங் இன்ஸ்டியூட் இயக்குநர் ரவி ராமநாதன், கோவை டெக்னாலஜி சொல்யூஷன்ஸ் நிர்வாகி மிதுனா மயில்சாமி சிறப்புரையாற்றினர்.
விழாவை பேராசிரியர் அருணாதேவி ஜெகதீஸ்வரி தொகுத்து வழங்கினார்.
ஒருங்கிணைப்பாளர் மகபூபாட்ஷா நன்றி கூறினார்.
