/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
எம்.ஆர்.கே., கல்லுாரியில் முதலாமாண்டு துவக்க விழா
/
எம்.ஆர்.கே., கல்லுாரியில் முதலாமாண்டு துவக்க விழா
ADDED : செப் 05, 2024 07:20 PM

காட்டுமன்னார்கோவில்:காட்டுமன்னார்கோவில் எம்.ஆர்.கே., பொறியியல் கல்லுாரியில், முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு வகுப்பு துவக்க விழா நடந்தது.
நிகழ்ச்சிக்கு கல்லூரி சேர்மன் கதிரவன் தலைமை தாங்கினார். முதல்வர் ஆனந்தவேலு வரவேற்றார். நிர்வாக அதிகாரி கோகுலகண்ணன், மேலாளர் விஸ்வநாத் முன்னிலை வகித்தனர். திருச்சி நேஷனல் இன்ஸ்ட்யூட் ஆப் டெக்னாலஜி பேராசிரியர் பார்த்திபன் துவக்க விழா உரையாற்றினார்.
சென்னை டெல்பி டி.வி.எஸ்., டெக்னாலஜி துணை பொது மேலாளர்கள் நாகராஜன், ராஜ்கண்ணன் ஆகியோர் பேசினர். துறைத் தலைவர் திருவாசகமூர்த்தி முதலாமாண்டு மாணவர்களுக்கு பாடத்திட்ட வடிவமைப்பு குறித்து எடுத்துரைத்தார்.
பேராசிரியை சிவப்பிரியா நன்றி கூறினார்.