ADDED : ஆக 06, 2024 07:06 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சத்திரம் : புதுச்சத்திரம் அருகே வயிற்று வலி காரணமாக மீனவர், துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
புதுச்சத்திரம் அடுத்த பெரியக்குப்பத்தை சேர்ந்தவர் சுப்ரமணியன், 62; மீனவர். இவருக்கு அடிக்கடி வயிற்று வலி இருந்து வந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் வயிற்று வலி அதிகமாகவே, வாழ்க்கையை வெறுத்த அவர், தனது வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து மனைவி தையல்நாயகி கொடுத்த புகாரில், புதுச்சத்திரம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.