/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
விளையாட்டு விடுதியில் தங்கி படிக்க மாணவர்களுக்கு உடற்தகுதி தேர்வு
/
விளையாட்டு விடுதியில் தங்கி படிக்க மாணவர்களுக்கு உடற்தகுதி தேர்வு
விளையாட்டு விடுதியில் தங்கி படிக்க மாணவர்களுக்கு உடற்தகுதி தேர்வு
விளையாட்டு விடுதியில் தங்கி படிக்க மாணவர்களுக்கு உடற்தகுதி தேர்வு
ADDED : மே 11, 2024 05:12 AM

கடலுார்: விளையாட்டு விடுதியில் தங்கி படிக்க மாணவர்களுக்கான மாவட்ட அளவிலான உடற்தகுதி தேர்வு கடலுாரில் நடந்தது.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் கீழ் பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவியர்களுக்கு விளையாட்டு துறையில் சாதனைகள் புரிவதற்கு ஏற்ப விளையாட்டு பயிற்சி, தங்குமிடம் வசதி மற்றும் உணவுடன் கூடிய விளையாட்டு விடுதிகள் மற்றும் விளையாட்டு பள்ளிகள் செயல்பட்டு வருகின்றது.
இந்த விளையாட்டு விடுதிகளில் தடகளம், கூடைப்பந்து, கால்பந்து, ஹாக்கி, வாலிபால், கிரிக்கெட், கேன்ட் பால், நீச்சல் மற்றும் கபடி விளையாட்டுகளில் பயிற்சி பெற 7, 8, 9 மற்றும் பிளஸ் 1 வகுப்பு சேர்க்கைக்கு மாணவர்களுக்கான மாவட்ட அளவிலான உடற்தகுதி தேர்வுகள் நடந்தது.
கடலுார் அண்ணா விளையாட்டு மைதானத்தில் நடந்த உடற்தகுதி தேர்வில், ஏற்கனவே ஆன்லைன் மூலமாக விண்ணப்பித்த 180 மாணவர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர். மாவட்ட விளையாட்டு அலுவலர் மகேஷ்குமார் ஆய்வு செய்தார்.
மாணவர்களுக்கு உடற்தகுதி தேர்வுகள் நடத்தப்பட்டு அவர்கள் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் மாநில அளவிலான தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள். மாநில அளவிலான தேர்வில் கலந்து கொண்டு அவர்கள் பெரும் தகுதி மதிப்பெண் அடிப்படையில் விளையாட்டு விடுதிக்கு தேர்வு செய்யப்பட உள்ளனர். இன்று 11ம் தேதி மாணவியருக்கான தேர்வு நடக்கிறது.