/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
விருதை கோவிலில் மாசி மக பிரம்மோற்சவ கொடியேற்றம்
/
விருதை கோவிலில் மாசி மக பிரம்மோற்சவ கொடியேற்றம்
ADDED : மார் 04, 2025 07:10 AM

விருத்தாசலம்; விருத்தகிரீஸ்வரர் கோவிலில் மாசிமக பிரம்மோற்சவ விழாவையொட்டி, கொடியேற்ற நிகழ்ச்சி நடந்தது.
விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில் மாசிமக திருவிழா கடந்த 11ம் தேதி செல்லியம்மனுக்கு காப்பு கட்டும் நிகழ்ச்சியுடன் துவங்கியது. கடந்த 21ம் தேதி ஆழத்து விநாயகர் கோவிலில் கொடியேற்ற நிகழ்ச்சியை தொடர்ந்து, விருத்தாம்பிகை பாலம்பிகை சமேத விருத்தகிரீஸ்வரர் உள்ளிட்ட பஞ்சமூர்த்தி சுவாமிகளுக்கு கொடியேற்ற நிகழ்ச்சி நேற்று நடந்தது.
காலை 8:00 மணிக்கு விநாயகர், சுப்ரமணியர், விருத்தாம்பிகை உடனுறை விருத்தகிரீஸ்வரர், பாலம்பிகை, சண்டிகேஸ்வரர் ஆகிய பஞ்சமூர்த்திகளுக்கு சிறப்பு அபிேஷகம் நடந்தது. பஞ்சமூர்த்திகள் 5 கொடி மரங்கள் முன்பு அருள்பாலித்தனர். அதன்பின், சிவாச்சாரியார்கள் மந்திரங்கள் முழங்க காலை 9:30 மணியளவில் 5 கொடி மரங்களில் கொடியேற்றம் நடந்தது. ஏராளமானோர் சுவாமி தரிசனம் செய்தனர்.