/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பண்ருட்டி அவுலியா தர்காவில் கந்துாரி உரூஸ் கொடியேற்றம்
/
பண்ருட்டி அவுலியா தர்காவில் கந்துாரி உரூஸ் கொடியேற்றம்
பண்ருட்டி அவுலியா தர்காவில் கந்துாரி உரூஸ் கொடியேற்றம்
பண்ருட்டி அவுலியா தர்காவில் கந்துாரி உரூஸ் கொடியேற்றம்
ADDED : ஆக 02, 2024 10:46 PM

பண்ருட்டி, - பண்ருட்டி ஹஜரத் நுார்முகம்மது அவுலியா தர்கா கந்துாரி உரூஸ் பண்டிகை நேற்று முன்தினம் கொடியேற்றத்துடன் துவங்கியது.
பண்ருட்டி ஹஜரத் நுார்முகம்மது அவுலியா தர்கா கந்துாரி உரூஸ் பண்டிகை கடந்த 31 ம்தேதி பான்வாஜமா பக்கீர் மற்றும் ரீப்பாய் ஜமாக்கள் தர்காவிற்கு வருகை புரிதல், நேற்றுமுன்தினம் 1 ம்தேதி இரவு கொடி ஊர்வலம் நடந்தது.
விழாவில் ஜெ.பி.ஆர். ஸ்டீல் அதிபர் ஜாகிர் உசேன், அவுலியா நகர் ஜமாத் தலைவர் சுல்தான், தர்கா டிரஸ்டி அப்துல்கலாம் ஆசாத்,தலைவர் சித்திக்பாஷா , நிர்வாக குழு உறுப்பினர்கள் முகமதுகாசிம், ஜாகிர்உசேன், வக்பு சரக கண்காணிப்பாளர் சபீபுல்லா , கவுன்சிலர் முகமதுஹனிபா மற்றும் ஜமாத் நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.