/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
தீவன தொழிற்சாலைக்கு அடிக்கல் நாட்டுவிழா
/
தீவன தொழிற்சாலைக்கு அடிக்கல் நாட்டுவிழா
ADDED : ஜூலை 30, 2024 05:50 AM

திட்டக்குடி: திட்டக்குடி தாலுகா, ம.புடையூர் கிராமத்தில் நபார்டு திட்ட கடனுதவியுடன் ரூ. 33 கோடியில் கால்நடை தீவனம் தயாரிக்கும் தொழிற்சாலை அமைக்க, கடந்த ஆண்டு நவம்பரில் தமிழக அரசு அனுமதி அளித்தது. நேற்று சென்னை தலைமை செயலகத்தில் நடந்த விழாவில் தமிழக முதல்வர் ஸ்டாலின், ம.புடையூரில் கால்நடை தீவன தொழிற்சாலை அமைக்கும் திட்டத்தை காணொலி காட்சி மூலம் துவக்கி வைத்தார்.
தொடர்ந்து ம.புடையூரில் தொழிற்சாலை அமைய உள்ள இடத்தில் பூமிபூஜை நடந்தது. மங்களூர் ஒன்றிய சேர்மன் சுகுணா சங்கர் , தி.மு.க., ஒன்றியசெயலாளர் அமிர்தலிங்கம் மற்றும் அரசு அலுவலர்கள், தி.மு.க., நிர்வாகிகள் பங்கேற்றனர்.
கடலுார் விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருச்சி, சேலம், காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலுார், திருவண்ணாமலை மாவட்டங்களில் உள்ள பால் உற்பத்தியாளர்களுக்கு உகந்த, தரமான கால்நடை தீவனம் வழங்கப்படுவதை உறுதி செய்வதும், பால் உற்பத்தியை அதிகரிக்கச் செய்வதும், இத்திட்டத்தின் நோக்கம். தினசரி, 300டன் கால்நடை தீவனம் உற்பத்தி செய்யும் திறன் உடையதாக, இத்தொழிற்சாலை அமைக்கப்பட உள்ளது.