/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
நடமாடும் வாகனம் மூலம் உணவு தர பரிசோதனை
/
நடமாடும் வாகனம் மூலம் உணவு தர பரிசோதனை
ADDED : ஜூலை 13, 2024 12:48 AM

நெல்லிக்குப்பம்: நெல்லிக்குப்பம் நகராட்சி உணவு பாதுகாப்பு துறையினர், சென்னை, கிண்டி உணவு பகுப்பாய்வு நடமாடும் வாகனம் மூலம் உணவு பொருட்கள் தர பரிசோதனை முகாம் நடந்தது.
முகாமை நகரமன்ற தலைவர் ஜெயந்தி துவக்கி வைத்தார். ஆய்வின் மூலம் வியாபாரிகள் விற்பனை செய்யும் உணவு பொருட்களில் கலப்படம் இருக்கிறதா என நேரடியாக தெரிந்து கொள்ள முடியும்.
மேலும் உணவு பொருட்களில் கலப்படம் உள்ளதா என்பதை எளிதாக மக்களே அறிந்து கொள்ளும் வழிமுறைகளையும் உணவு பாதுகாப்பு அலுவலர் ரவிச்சந்திரன் விளக்கினார்.
பகுப்பாய்வாளர் சரவணன் உணவு பொருட்களின் தரத்தை ஆய்வு செய்து விளக்கினார். துணைத் தலைவர் கிரிஜா, நகராட்சி கமிஷனர் கிருஷ்ணராஜன் மற்றும் வியாபாரிகள் பங்கேற்றனர்.
தொடர்ந்து கடைகளுக்கு நேரடியாக சென்று உணவு மாதிரிகளை ஆய்வுக்கு எடுத்து சென்றனர். ஆய்வுக்குப்பின் கலப்படம் இருப்பது கண்டறியப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடப்பட்டது.