/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
உணவு பாதுகாப்பு சட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சி
/
உணவு பாதுகாப்பு சட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சி
ADDED : ஜூன் 16, 2024 06:18 AM

மந்தாரக்குப்பம்: உணவு பாதுகாப்பு சட்டம் மற்றும் வழிமுறைகள் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
கடலுார் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை சார்பில் வடலுார், குறிஞ்சிப்பாடி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள திருமண மண்டபங்கள், மஹால் உரிமையாளர்கள், மேலாளர்கள், சமையல் கலைஞர்களுக்கு உணவு பாதுகாப்பு சட்டம் மற்றும் உணவு பாதுகாப்பு வழிமுறைகள் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி வடலுாரில் நடந்தது.
அதில் திருமண மண்டபங்கள், மஹால் உரிமம், பதிவு சான்றிதழ் அவசியம் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது. மேலும் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள், தாம்பூல பைகள், பிளாஸ்டிக் டீ கப்கள், தெர்மகோல் உள்ளிட்டவை பயன்படுத்தக்கூடாது எனவும், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தினால் அபாரதம் விதிக்கப்படும் என தெரிவித்தனர். அதை தொடர்ந்து திருமண மண்டப உரிமையாளர்களுக்கு உரிமம் மற்றும் பதிவு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. உணவு பாதுகாப்பு அலுவலர்கள் சந்திரசேகரன், சுப்ரமணியன், சுந்தரமூர்த்தி, திருமண மண்டப உரிமையாளர்கள் சங்க நிர்வாகி ராஜமாரியப்பன் உள்ளிட்டோர் பேசினர்.