/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
தெலுங்கானாவிற்கு, 200 மெகாவாட் மின்சாரம்; என்.எல்.சி., ஒப்பந்தம்
/
தெலுங்கானாவிற்கு, 200 மெகாவாட் மின்சாரம்; என்.எல்.சி., ஒப்பந்தம்
தெலுங்கானாவிற்கு, 200 மெகாவாட் மின்சாரம்; என்.எல்.சி., ஒப்பந்தம்
தெலுங்கானாவிற்கு, 200 மெகாவாட் மின்சாரம்; என்.எல்.சி., ஒப்பந்தம்
ADDED : ஆக 29, 2024 07:58 PM
நெய்வேலி:மத்திய பொதுத்துறை நிறுவன திட்டத்தின் கீழ், என்.எல்.சி., நிறுவனம், தெலுங்கானாவிற்கு மலிவு விலையில், 200 மெகாவாட் சூரிய ஒளி மின்சக்தியை, 25 ஆண்டிற்கு வழங்க முடிவு செய்துள்ளது. இதுகுறித்து, அம்மாநில விநியோக நிறுவனங்களுடன் மின் பயன்பாட்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.
என்.எல்.சி., நிறுவனத்தின் சூரிய சக்தி மின் திட்டம், 1,300 கோடி யூனிட், பசுமை மின்சக்தியை உற்பத்தி செய்யவும், அதன் வாழ்நாளில், 90 லட்சம் டன் கார்பன் வெளியேற்றத்தை ஈடு செய்யும் வகையிலும் அமைக்கப்பட்டுள்ளது.
இத்திட்டம், 'ஆத்ம நிர்பார் பாரத்' திட்டத்தின் கீழ், உயர்ந்த பட்ச உற்பத்தி பெறுவதை நோக்கமாக கொண்டதாகும். அதிநவீன தொழில்நுட்ப வசதிகள் கொண்ட உபகரணங்களுடன் உருவாக்கப்படும் இத்திட்டம், ஜூன் 2025க்குள் செயல்படுத்தப்பட உள்ளது.
தெலுங்கானா மாநிலத்தின் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி கொள்முதல் கடமையை பூர்த்தி செய்வதோடு, மலிவு விலையில் பசுமை மின்சாரத்தையும் வழங்குகிறது.
கடந்த 30 ஆண்டிற்கு மேலாக, என்.எல்.சி., தெலுங்கானா மாநிலத்திற்கு நியாயமான விலையில், 234 மெகாவாட் அனல் மின்சாரத்தை வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.

