/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
முன்னாள் முதல்வர் இ.பி.எஸ்., பிறந்த நாள் விழா
/
முன்னாள் முதல்வர் இ.பி.எஸ்., பிறந்த நாள் விழா
ADDED : மே 13, 2024 05:27 AM

வடலுார்: கடலுார் தெற்கு மாவட்ட அ.தி.மு.க., சார்பில், முன்னாள் முதல்வர் பழனிசாமி பிறந்த நாளையொட்டி, வடலுார், குறிஞ்சிப்பாடி பகுதி கோவில்களில் சிறப்பு பிரார்த்தனை, அன்னதானம், ஏழை, எளிய மக்களுக்கு வேட்டி, சேலை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
தெற்கு மாவட்ட அ.தி.மு.க., சார்பில், திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவில், வடலுார் வள்ளலார் சத்திய ஞான சபை, குறிஞ்சிப்பாடி புத்து மாரியம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. தொடர்ந்து அன்னதானம், வேட்டி, சேலை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
நிகழ்ச்சிக்கு, தெற்கு மாவட்ட செயலாளர் சொரத்துார் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர்கள் கோவிந்தராஜ், பாஷியம், வினோத், கமலக்கண்ணன், நகர செயலாளர்கள் வடலுார் பாபு, குறிஞ்சிப்பாடி ஆனந்த பாஸ்கர் முன்னிலை வகித்தனர்.
முன்னாள் எம்.எல்.ஏ., சிவசுப்ரமணியன், மாவட்ட பேரவை செயலாளர் வழக்கறிஞர் ராஜசேகர், மாநில பேரவை செயலாளர் பக்தரட்சகன், மாவட்ட இளைஞரணி செயலாளர் அன்பு, இணை செயலாளர் தினேஷ், விழுப்புரம் மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் ராதாகிருஷ்ணன், மாவட்ட எம்.ஜி.ஆர்., மன்ற செயலாளர் தங்கப்பன், தகவல் தொழில்நுட்ப அணி திருமலைவாசன், நெய்வேலி அண்ணா தொழிற்சங்க நிர்வாகிகள் கோவிந்தராஜ், வெற்றி, முன்னாள் நகர செயலாளர் ரஜினி உட்பட பலர் பங்கேற்றனர்.