ADDED : மே 09, 2024 04:19 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நெய்வேலி: சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட ஓய்வு பெற்ற போலீஸ் ஏட்டு போக்சோவில் கைது செய்யப்பட்டார்.
கடலுார் மாவட்டம், குறிஞ்சிப்பாடியை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி,61; ஓய்வு பெற்ற போலீஸ் ஏட்டு. இவர், அதே பகுதியை சேர்ந்த 10 வயது சிறுமியிடம் ஆபாச படத்தை காட்டி பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். இதுகுறித்து சிறுமியின் தாய் அளித்த புகாரின் பேரில் நெய்வேலி அனைத்து மகளிர் போலீசார் போக்சோ பிரிவில் வழக்கு பதிந்து கிருஷ்ணமூர்த்தியை கைது செய்தனர்.