/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
லஞ்ச ஒழிப்பு போலீஸ் விசாரணைக்கு மாஜி எம்.எல்.ஏ., கணவருடன் ஆஜர்..
/
லஞ்ச ஒழிப்பு போலீஸ் விசாரணைக்கு மாஜி எம்.எல்.ஏ., கணவருடன் ஆஜர்..
லஞ்ச ஒழிப்பு போலீஸ் விசாரணைக்கு மாஜி எம்.எல்.ஏ., கணவருடன் ஆஜர்..
லஞ்ச ஒழிப்பு போலீஸ் விசாரணைக்கு மாஜி எம்.எல்.ஏ., கணவருடன் ஆஜர்..
ADDED : ஜூலை 13, 2024 12:23 AM

கடலுார்: பண்ருட்டி அ.தி.மு.க., மாஜி எம்.எல்.ஏ., மற்றும் அவரது கணவர் கடலுார் லஞ்ச ஒழிப்பு போலீஸ் விசாரணைக்கு ஆஜராகினர்.
கடலுார் மாவட்டம், பண்ருட்டி தொகுதி அ.தி.மு.க., முன்னாள் எம்.எல்.ஏ., சத்யா. இவரது கணவர் பன்னீர்செல்வம். கடந்த 2011-16ம் ஆண்டு பண்ருட்டி நகர மன்ற தலைவராக பதவி வகித்தபோது, பண்ருட்டி பஸ் நிலையத்தில் இருசக்கர வாகனம் நிறுத்துமிடத்தை டெண்டர் விடுவதில் ரூ.20 லட்சம் மோசடி செய்ததாக பண்னீர்செல்வம், அப்போதைய கமிஷனர் பெருமாள் உள்ளிட்ட 6 பேர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்திருந்தனர்.
இதுதொடர்பாக கடந்த பிப்ரவரி 28ம் தேதி பண்ருட்டி, சென்னை உள்ளிட்ட 5 இடங்களில் சத்யா மற்றும் பன்னீர்செல்வத்திற்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர். அதில், விவசாய நிலம் மற்றும் வீட்டு மனை உட்பட ரூ.15 கோடி மதிப்பிலான 47 ஆவணங்கள் கைப்பற்றப்பட்டது.
இந்த ஆவணங்கள் குறித்து விரிவான விசாரணைக்கு நேற்று 12ம் தேதி கடலுார் லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்தில் ஆஜராக வேண்டி போலீசார் சம்மன் அனுப்பியிருந்தனர்.
அதன்பேரில் சத்யா, அவரது கணவர் பன்னீர்செல்வம் ஆகியோர் நேற்று காலை 10:30 மணிக்கு கடலுார் லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்தில் ஆஜராகினர்.
அவர்களிடம், சோதனையின்போது கைப்பற்றப்பட்ட ஆவணங்களில் உள்ள சொத்துக்கள் மற்றும் அதனை வாங்குவதற்கான வருமானம் எப்படி வந்தது என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அதற்கு அவர்கள் கூறிய விளக்கத்தை போலீசார் பதிவு செய்தனர். விசாரணை முடிந்ததை தொடர்ந்து மதியம் 1:30 மணிக்கு இருவரும் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.